ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் பெறும் என சசி தரூர் எம்.பி. நம்பிக்கை

Shashi Tharoor

சசி தரூர் - கோப்புப் படம்

Published On :

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் பெறும் என சசி தரூர் எம்.பி. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் செய்தியாளர்களுடன் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசியதாவது, "கேரளத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் நான் பிரசாரம் செய்தேன். நாங்கள் வெல்வோம் என்று உறுதியாக நம்புகிறேன்.

கட்சியினர், தொண்டர்களிடமிருந்து மட்டுமில்லாமல், மக்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு, 75-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது. கருத்துக் கணிப்புகளும் அதையே பிரதிபலித்துள்ளன.

இருப்பினும், பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளின் ரசிகன் அல்ல. ஏனெனில், நம்முடையது ஒரே மாதிரியான சமூகம் அல்ல. பாலினம், சாதி, வர்க்கம், மொழியியல் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், துல்லியமான கணிப்பைப் பெறுவது கடினம்" என்று தெரிவித்தார்.

Summary

Keralam 2026 Polls: Shashi Tharoor MP expresses confidence that the Congress will win over 75 seats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.