கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என அக்கட்சியின் எம்.பி., சசி தரூர் இன்று (மே 3) நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் மீது பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், இம்முறை அனைவரும் ஒருமித்த கருத்தை வெளியிட்டுள்ளதால் வியக்கத்தக்க முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார்.
இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் சசிதரூர் பேசியதாவது:
''தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றன. தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஏராளமான பிரச்னைகள் நம் நாட்டில் உள்ளன. அவற்றை சார்ந்திருக்க நான் விரும்புவதில்லை.
ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை அறிவித்துள்ளனர். ஒருமித்த முடிவாக இது உள்ளதால், வியப்பாக உள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நிபுணர்களும், பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்கள், ஆய்வாளர்களும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கின்றனர்.
ஏப். 4 ஆம் தேதி முதலே அவர்களில் சிலரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசி வருகிறேன். ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி என்று கூறுகின்றனர். எனவே நாளை காலை என்ன நடக்கிறது என்பதை பார்க்க நாம் ஆவலாக இருக்கிறோம். ஆனால், நான் நாளை மதியத்திற்காக காத்திருக்கிறேன். ஏனென்றால் பிற்பகலுக்குள் தெளிவான நமக்குச் சாதமான நிலை என்பது தெரிந்துவிடும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
keralam election result in Keralam is going to be a UDF win Congress MP Shashi Tharoor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











