கேரளத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், புதிய முதல்வர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மைக்குத் தேவையான 71-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியினுள் கேரளத்தின் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயளாலர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஸன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், கேரளத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் 63 சட்டப்பேரவை உறுப்பினர்களில் கே.சி. வேணுகோபால் முதல்வராகப் பதவியேற்க 47 பேரும், வி.டி. சதீஸனுக்கு 10 பேரும், ரமேஷ் சென்னிதாலாவுக்கு 6 பேரும் ஆதரவளிப்பதாக, காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து வரும் மே 11 அல்லது மே 12 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் எனவும், புதிய அமைச்சரவையின் பதவியேற்பு வரும் மே 15 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வி.டி. சதீஸனுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
in Kerala three-way contest for the post of Chief Minister is currently unfolding.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸ் - திரிணமூல் இணைப்பா? கே.சி. வேணுகோபால் பதில்!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி

போட்டியால் திணறும் காங்கிரஸ்! கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிப்பு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




