பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி தலைமையிலான புதிய பாஜக அமைச்சரவை வரும் மே 7 ஆம் தேதி பதவியேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில், கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், முதல்முறையாக பாஜகவின் சாம்ராட் சௌதரி கடந்த ஏப். 14 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், புதன்கிழமை (ஏப். 6) மாலை 5 மணியளவில் பிகார் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாகவும்; பின்னர், மாலை 6 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், நாளை நடைபெறும் பிகாரின் புதிய பாஜக அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
BJP cabinet, led by Bihar CM Samrat Choudhary, will be sworn in on May 7th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் நிதிஷ்குமாரின் மகன் உள்பட 31 அமைச்சர்கள் பதவியேற்பு!

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

எம்.பி.யாக நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) பதவியேற்பு! அடுத்த முதல்வர் யார்?

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

