பிகாரின் முதல்வராக சாம்ராட் சௌதரி புதன்கிழமை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிகாரில் நேற்று (ஏப்.14) மாலை சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்த மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக பாஜக தலைவரும், பிகார் துணை முதல்வருமான சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஹஸ்னைனிடம் புதிய ஆட்சியமைக்க கோரினார் சாம்ராட் சௌதரி.
பிகாரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில், ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், சாம்ராட் சௌதரிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
20 ஆண்டுகாலம் பிகாரின் முதல்வராக இருந்த நிதிஷ்குமாருக்குப் பின்னர், 21-வது பிகார் முதல்வராகவும், பிகாரில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைகளையும் 57 வயதான சாம்ராட் சௌதரி பெற்றுள்ளார்.
துணை முதல்வர் யார்? என்ற சந்தேகத்துக்கு முடிவுகட்டும் விதமாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் விஜய் குமார் சௌதரி, துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

சாம்ராட் சௌதரி.
முன்னதாக, கடந்தாண்டு (2025) நவம்பரில் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் அமோகவெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முறையே 89, 85 இடங்களில் அமோக வெற்றியைப் பதிவு செய்தன.
பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், தொடர்ந்து இரண்டாவது தேர்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அதேநேரம், மாநில முதல்வராக 10-வது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்றார். 2005 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவியில் நீடித்த அவர், பிகாரின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமைக்குரியவராகவும் இருந்தார்.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடிய நிதீஷ் குமார், மாநிலங்களவை எம். பி.யாகும் தனது முடிவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியதால், பிகார் மாநில சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை ராஜிநாமா செய்தார். நிதீஷ் குமார் கூட்டணி முன்மொழிவின் பேரில் முதல்வராக பாஜகவின் சாம்ராட் சௌதரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹிந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் பாஜக முதல்வர்கள் ஆட்சியில் உள்ள நிலையில், பிகாரில் முதல் முறையாக பாஜக முதல்வராக சாம்ராட் சௌதரி பதவியேற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த சௌதரி, செவ்வாய்க்கிழமை அன்று பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிக்கலான அரசியல்களம் கொண்ட பிகாரில் முதல்வராகப் பதவியேற்றுள்ள சாம்ராட் சௌதரி சாதி ரீதியிலான மிகப்பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறார். பிகாரில் செல்வாக்கு மிக்க கோயரி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது முதல்வர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, பிகாரின் ஆறாவது முதல்வராக இருந்த மற்றும் இந்தியாவின் மிகக் குறுகிய காலம் முதல்வராக வெறும் நான்கு நாள்கள் பதவி வகித்த சதீஷ் பிரசாத் சிங் அந்த பெருமையை தக்கவைத்துள்ளார். 1968 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி அவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதால், அவரது அரசு கவிழ்ந்தது.
பிகாரில் துணை முதல்வர் மற்றும் முதல்வர் என்ற இரண்டு பதவிகளையும் வகித்தவர் என்ற சிறப்பை பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூரின் வரிசையில் சாம்ராட் சௌதரியும் இணைந்திருக்கிறார். கர்பூரி தாக்கூர் 1967 ஆம் ஆண்டில் துணை முதல்வராகவும், 1970 ஆம் ஆண்டில் முதல்வராக நீண்ட நாள் எடுத்ததைப் போல் அல்லாமல் மிக விரைவாக முதல்வர் நாற்காலியைப் பெற்றிருக்கிறார் சாம்ராட் சௌதரி.
Summary
Senior BJP leader Samrat Choudhary on Wednesday took oath as the 21st Chief Minister of Bihar, marking a significant political shift in the state and bringing an end to Nitish Kumar’s long-standing tenure at the helm.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?

எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


