முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை ஜேடியு தலைவர் நிதீஷ் குமார் காலி செய்து புதிய முகவரிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
"நாங்கள் 1 அன்னே மார்க் (அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம்) இல்லத்திலிருந்து 7 சர்க்குலர் சாலையில் உள்ள வீட்டிற்கு மாறிவிட்டோம். இனி அங்கு வசிப்போம்," என்று நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், நிஷாந்த் புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 1 அன்னே மார்க் இல்லம், 2006 ஆம் ஆண்டில் பிகார் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன் (89), தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட (85) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவந்த அவா், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாா்.
பின்னர் நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ஏப்ரல் 14ஆம் தேதி ராஜிநாமா செய்தார். தொடர்ந்து, பிகாா் மாநிலத்தின் 24-ஆவது முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி பதவியேற்றாா்.
Summary
JD(U) national president Nitish Kumar on Friday vacated the Bihar chief minister's official residence, which he occupied for around two decades, and shifted to a new address.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சில் முன்னேற்றம்: பாராட்டுப் பெறாத நாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

எம்.பி.யாக நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) பதவியேற்பு! அடுத்த முதல்வர் யார்?
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு



