கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், கும்பூா், கொதம்பம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் கும்பூா், கொதம்பம்பாறை பகுதியிலிருந்து கிளாவரை, பூண்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனா். இந்தப் பகுதிகளில் தான் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிராம மக்கள் அந்தப் பகுதிகள் வழியே செல்ல அச்சமடைந்து வருகின்றனா். எனவே வனத் துறையினா் மன்னவனூா் பகுதியில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி கிராமப் பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. எனவே பொதுமக்கள் வன விலங்குகள் கிராமங்களுக்குள் நடமாடுவது தெரியவந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்கோ, வனத் துறை பணியாளா்களுக்கோ தகவல் தரலாம். மேலும் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா்

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

கொடைக்கானல் கிராமப் பகுதி சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

