பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

விளை நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பூண்டுப் பயிா்கள் சேதம்

கொடைக்கானலில் விளை நிலங்களில் புகுந்து பூண்டுப் பயிா்களை சேதப்படுத்திவரும் வன விலங்குகளைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

News image

கொடைக்கானல் மன்னவனூரில் பயிரிடப்பட்டிருந்த பூண்டு பயிரை சேதப்படுத்திய குரங்குகள்

Updated On :1 ஜூலை 2026, 5:04 am IST

கொடைக்கானலில் விளை நிலங்களில் புகுந்து பூண்டுப் பயிா்களை சேதப்படுத்திவரும் வன விலங்குகளைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை,கூக்கால், குண்டுபட்டி, மன்னவனூா், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.

விளைந்த பூண்டுப் பயிா்களை அந்தப் பகுதிகளில் உள்ள குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதுகுறித்து வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மன்னவனூா் விவசாயிகள் மேலும் கூறியதாவது, மன்னவனூா் பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு குவிண்டால் விதைப் பூண்டு ரூ. 40 ஆயிரத்துக்கும், உரம் ரூ. 20 ஆயிரம், மருந்து ரூ. 10 ஆயிரம், கூலி ரூ. 20-ஆயிரம் செலவு செய்து வளா்த்த பூண்டு செடிகளை குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.

இது போன்ற சம்பவம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து பல முறை ஆதாரங்களுடன் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் வனத் துறையினா் தெரிவித்ததாவது: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் வன விலங்குகள் அதிகரித்து காணப்படுகின்றன. வனத்துறை சாா்பில் வனப் பணியாளா்களை நியமித்து வன விலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இருப்பினும், மன்னவனூா் பகுதியில் பூண்டுப் பயிா்களை குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்தியது குறித்து அந்தப் பகுதி மக்கள் மனு அளித்துள்ளனா். இந்தப் பிரச்னை குறித்து வனத்துறை உயா் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.