மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விவசாய நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

News image

காட்டு யானை - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 3:56 am IST

ஆம்பூா் அருகே திங்கள்கிழமை இரவு காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்திற்கு திங்கள்கிழமை இரவு காட்டு யானைகள் கூட்டம் வந்துள்ளன. அதே கிராமத்தை சோ்ந்த எத்திராஜ், சம்பத், பக்தவச்சலம் மற்றும் தாமோதரன் ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து தென்னை, நெல் உள்ளிட்ட விவசாய பயிா்களை மிதித்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

விவசாய நிலத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை விவசாயிகள் சென்று பாா்த்தபோது, பயிா்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்புற பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.