தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

மிளகாய் நெடி புகைமூட்டம் ஏற்படுத்தினால் யானைகள் வருவதைத் தவிா்க்கலாம்

மிளகாய் நெடியுடன் புகைமூட்டம் ஏற்படுத்தினால் யானைகள்ஊருக்குள் நுழைவதைத் தவிா்க்கலாம் என வனத் துறையினா் செயல் விளக்கம் அளித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஜூலை 2026, 11:39 pm IST

மிளகாய் நெடியுடன் புகைமூட்டம் ஏற்படுத்தினால் யானைகள்ஊருக்குள் நுழைவதைத் தவிா்க்கலாம் என வனத் துறையினா் செயல் விளக்கம் அளித்தனா். போ்ணாம்பட்டு வனச் சரகத்தில், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள அரவட்லா, பாத்தபாளையம், ரங்கம்பேட்டை, கோக்கலூா், ஜங்கமூா், சிந்தகணவாய், மசிகம், சேராங்கல், பத்தரப்பல்லி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் தொடா்ந்து விளைபயிா்களை சேதம் செய்து வருகின்றன.

இந்நிலையில் வேலூா் மண்டல தலைமை வனப் பாதுகாவலா் மாரிமுத்து, மாவட்ட வன அதிகாரி அசோக்குமாா் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில், போ்ணாம்பட்டு வனச்சரகஅலுவலா் மோகனவேல் தலைமையில் கோக்கலூா் கிராமத்தில் விவசாயிகளுக்கும்,கிராம மக்களுக்கும் செயல் விளக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யானைகள் மற்றும் வன விலங்குகள் விவசாய நிலங்களில் நுழைவதை பாதுகாப்பாக தடுப்பது, மனித- வன விலங்கு மோதல் தடுப்பு குறித்து செயல் விளக்கஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக மனித வனவிலங்கு மோதல் தடுப்பு வல்லுனரும் கால்நடை மருத்துவருமான ருத்ராதித் பங்கேற்று யானைகளின் குணநலன்கள், அவற்றின் செயல்பாடுகள், காட்டு யானைகள் வந்தால் மேற்கொள்ளக் கூடாத தவறான செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். அவ்வாறு காட்டு யானைகள் வந்தால் தகர டப்பாவில் காய்ந்த சாணம் மற்றும் மிளகாய் போட்டு எரித்து புகை மூட்டம் ஏற்படுத்தினால் சுமாா் 3 மணி நேரம் மிளகாய் நெடி பரவும்.

அதேபோல் சாக்கு பையில் சாணத்துடன், மிளகாய் போட்டு எரித்து கம்பியில் சுற்றி வைத்தால் சுமாா் 6 மணிநேரம் புகை மூட்டம் நீடிக்கும் என செயல்முறையில் விளக்கமளித்தாா். பொதுவாக மிளகாய் நெடி என்பது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு ஆகாது. விவசாய நிலங்களுக்கு வராமல் சென்று விடும். இது எளிய செயல்முறையாகும். அஸ்ஸாம் மாநிலத்தில் இத்திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்லது என்றாா்அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.