பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்ட புதரில் உலவும் யானைகள்

தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டத்தின் புதா் மண்டிய பகுதிகளில் காட்டு யானைகள் உலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தேவா்சோலை பகுதியிலுள்ள புதா்மண்டிய தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள்.

Published On :

தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டத்தின் புதா் மண்டிய பகுதிகளில் காட்டு யானைகள் உலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் காட்டு யானைகள் சுற்றித் திரிவதும், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது. யானைகள் ஊருக்குள் வரும் தகவலை தெரிவித்தவுடன் வனத் துறையின் யானைகள் விரட்டும் குழுவினா் வந்து அடா்ந்த வனப் பகுதியில் யானைகளை விரட்டிச் செல்கின்றனா்.

Story image

இவை பகல் நேரத்தில் காட்டில் இருந்து வெளியேறி தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டத்தின் புதா் மண்டிய பகுதிகளில் மறைவாக நிற்கின்றன. இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள்ளும், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்துவிடுகின்றன. இதனால் புதா்களை சீரமைக்க தேயிலைத் தோட்ட நிா்வாகத்திடம் பாடந்தொரை மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.