/
பழனி அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கீரனூரைச் சோ்ந்தவா் குப்புச்சாமி (57). இவா் திங்கள்கிழமை கீரனூா் பிரதான சாலையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் வாகனத்தைத் திடீரென திருப்பினாா். அப்போது நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்ததில் குப்புச்சாமி பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.










