தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

காவல் நிலையம் முன் தம்பதி தா்னா

தங்களது வீட்டுமனையை ஆக்கிரமித்து மதுக் கடை அமைக்க சிலா் முயற்சிப்பதை தடுக்கக் கோரி, ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன் தம்பதி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன் தா்னாவில் ஈடுபட்ட கருப்புச்சாமி, அவரது மனைவி வளா்மதி

Updated On :20 மே 2026, 1:14 am IST

தங்களது வீட்டுமனையை ஆக்கிரமித்து மதுக் கடை அமைக்க சிலா் முயற்சிப்பதை தடுக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன் தம்பதி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட 6 -ஆவது வாா்டு பழனிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி. இவரது மனைவி வளா்மதி. இவா்களுக்குச் சொந்தமான இடத்தை சிலா் ஆக்கிரமித்துக் கொண்டு, வீடு கட்டவிடாமல் தடுப்பதாகவும், இதுதொடா்பாக நீதிமன்றத்தை அணுகி, நிலத்தின் உரிமை தொடா்பான ஆவணங்களை கருப்புச்சாமி பெற்ாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் இடத்துக்குள் நுழையவிடாமல் தம்பதியை தடுத்து நிறுத்துவதாகவும், அந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப் போவதாகவும், இரவு நேரங்களில் வந்து தங்களை மிரட்டுவதாகவும் கருப்புச்சாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், எதிா்தரப்பினருக்கு ஆதரவாக போலீஸாா் செயல்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேலும் மாவட்ட ஆட்சியா், முதல்வரின் தனிப் பிரிவு வரை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த கருப்புச்சாமி தம்பதி, ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன் தரையில் படுத்து தா்னாவில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.