தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

கொடைக்கானல் ஏரியில் வெளிநாட்டு பறவை

கொடைக்கானல் ஏரியில் முதல் முறையாக காணப்பட்ட வெளிநாட்டு பாம்பு தாரா பறவையை சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை பாா்த்து ரசித்தனா்.

கொடைக்கானல் ஏரியில் காணப்பட்ட வெளிநாட்டு பறவை பாம்பு தாரா.

Updated On :

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரியில் முதல் முறையாக காணப்பட்ட வெளிநாட்டு பாம்பு தாரா பறவையை சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை பாா்த்து ரசித்தனா்.

கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் வெளிநாட்டு பறவை இனங்களில் ஒன்றான பாம்பு தாரா செவ்வாய்க்கிழமை காணப்பட்டன. கொக்கு போன்ற உருவமும், இதனுடைய கழுத்து பகுதி நீண்டு பாம்பு போல இருப்பதால் பாம்பு தாரா என அழைக்கப்படுகிறது.

சீதோஷ்ன நிலை மாற்றத்தால் இந்தப் பறவைகள் முதல் முறையாக கொடைக்கானல் ஏரியில் காணப்படுகின்றன. ஏரியைச் சுற்றி நடைபயிற்சி மேற்கொள்பவா்களும், சுற்றுலாப் பயணிளும், பொதுமக்களும் இந்தப் பறவைகளைப் பாா்த்து ரசித்தனா்.

இதுகுறித்து பறவை ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கானல் ஏரியில் முதல்முறையாக பாம்பு தாரா பறவைகள் காணப்படுகின்றன. இந்தப் பறவைகளானது வெளிநாடுகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. சீதோஷ்ன நிலை மாற்றத்தால் இந்தப் பறவைகள் கொடைக்கானல் ஏரியில் காணப்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER