கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு!

தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியது பற்றி...

Delhi-bound Emirates flight encounters 'bird strike', return flight delayed

எமிரேட்ஸ் விமானம்.

Updated On :

தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு நிலவியது.

துபையிலிருந்து சனிக்கிழமை தலைநகர் தில்லி வந்த எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும் போது அதன் மீது பறவை மோதியது. இதையடுத்து அந்த விமானத்தை பழுதுபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால், அதன் மறுமார்க்கப் பயணம் சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியுள்ளது.

சனிக்கிழமை மாலை 4.25 மணிக்குப் புறப்பட வேண்டிய அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குப் புறப்படும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவித்துள்ளது. இருப்பினும், விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை போன்ற முக்கிய விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அக்டோபர் 18 ஆம் தேதி, தில்லி நேரப்படி காலை 7 மணிக்குத் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு எமிரேட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

Summary

A Delhi-bound Emirates flight from Dubai suffered a bird hit on arrival, forcing the airline to delay the return flight by over 14 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.