பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தில்லியில் மாணவிகளைத் தாக்கிய காவல் துறை! இதை மறக்கமாட்டோம் - காங்கிரஸ்

வாக்குத் திருட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தில்லி காவல் துறை கடுமையாக நடந்துகொண்டது குறித்து...

மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்யும் காவல் துறை - படம் - காங்கிரஸ் / பிடிஐ

Published On :

வாக்குத் திருட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தில்லி காவல் துறை கடுமையாக நடந்துகொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் மோடி அரசின் கட்டளைப்படி செயல்பட்ட காவல் துறையின் நடவடிக்கையை மறக்கமாட்டோம் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் இன்று அகில இந்திய தேசிய மாணவர் இயக்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுவர் ஏறி குதித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

அப்போது மாணவிகளை பெண் காவலர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். வாகனத்தில் ஏற்றிய மாணவிகளை பெண் காவலர்கள் கடுமையாக தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது.

இந்த விடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பதிவிட்டுள்ளதாவது:

''மாணவர்களை காவலில் எடுத்த பிறகு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலும், அங்கு வைத்து பெல்ட் மற்றும் லத்திகளாலும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில், தவறு செய்த பெண் காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், தில்லி காவல்துறையே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நாங்கள் இதை மறக்க மாட்டோம். மோடி அரசின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட இந்த அராஜகத்திற்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்'' என காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

Summary

Police attacked female students in Delhi We will not forget this Congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER