இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்தி

உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு என ராகுல் காந்தி தெரிவித்தது குறித்து...

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :

உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (அக். 13) தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் போன்றவை நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி நேற்று (அக். 12) பேரணியாகச் சென்று மனுத்தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் விடாமுயற்சி என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன். அதற்கு அர்த்தம் இந்த அணி ஓயப்போவதில்லை என்பதுதான். அது நாளை, மறுநாள், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம், அல்லது இரண்டு வருடங்கள் கழிந்தாலும் சரி நாங்கள் ஓயமாட்டோம்.

அத நாங்கள் எப்படி நிறைவேற்றுவோம் என்பதை என்னால் துல்லியமாகச் சொல்ல முடியாது, ஏனெனில் அது ஆச்சரியத்தைக் கெடுத்துவிடும். ஆனால், நாம் எவ்வளவு ஆற்றலுடனும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் அணிதிரண்டோமோ, அதே உணர்வோடு தொடர்ந்து ஒன்றிணைந்து போராடுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. உச்ச நீதிமன்றம், இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் இந்திய நீதித்துறை ஆகியவற்றின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இருப்பினும், நாங்கள் அரசியல்வாதிகள்; என்ன நடந்தாலும் சரி, எந்த அமைப்பு பங்கு வகித்தாலும் சரி, வகிக்காவிட்டாலும் சரி, அரசியல் எதிர்ப்பு தொடரும். மக்கள் எதிர்ப்பு தொடரும். எங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Summary

Lok Sabha Leader of the Opposition Rahul Gandhi stated on Tuesday (Oct. 13) that they have faith in the Supreme Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.