கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

இந்திய அரசியலமைப்பு என்பது அநீதிக்கு எதிரான ஆயுதம்! ராகுல் காந்தி

அரசியலமைப்பு நாளை முன்னிட்டு ராகுல் காந்தி பதிவு...

Rahul gandhi

ராகுல் காந்தி (கோப்புப்படம்) - ANI

Updated On :

இந்திய அரசியலமைப்பு என்பது அநீதிக்கு எதிரான ஆயுதம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை பதிவிட்டுள்ளார்.

1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவ. 26 ஆம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசியலமைப்பு நாளை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல, இந்த தேசத்தின் ஆன்மா.

இது ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் கேடயம், ஒவ்வொரு குரலுக்கும் வலிமை சேர்க்கும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் காவலன்.

இதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம். அநீதிக்கு எதிரான நமது மிகப்பெரிய ஆயுதம்.

அரசியலமைப்பு நாளில், நான் மீண்டும் ஒரு உறுதிமொழியை எடுக்கிறேன். எத்தகைய சூழலிலும் நாம் இதைப் பாதுகாப்போம். ஒவ்வொரு இந்தியனின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

அரசியலமைப்பு வாழ்க, இந்தியா வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Indian Constitution is a weapon against injustice! – Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.