ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு விலக்கப்பட்டதா? ஆட்சியிலிருந்ததே காங்கிரஸ்தான்: பாஜக
ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு விலக்கப்பட்டதாக ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக தெரிவித்த கருத்து தொடர்பாக...

ராம்தாஸ் அதாவலே - படம் - ஏஎன்ஐ
ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு விலக்கப்பட்டதாக ராகுல் காந்தி பேசியதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கருத்து தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி எழுதிய "பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்" என்ற நூல் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இணைந்து உரையாடல் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அதில் பேசிய ராகுல் காந்தி, “என் தந்தை கொல்லப்பட வேண்டுமென்றே அவரது பாதுகாப்பு விலக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ராம்தாஸ் அதாவலே பேசியதாவது:
தன்னுடைய தந்தையின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக ராகுல் காந்தி கூறுகிறார். இருப்பினும், அந்த நேரத்தில் மத்தியில் அவருடைய சொந்தக் கட்சியே ஆட்சியில் இருந்தது.
நாட்டின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். அவருடைய பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு யாரையாவது பொறுப்பாக்க வேண்டும் என்றால், அது அவருடைய சொந்தக் கட்சியாகவோ அல்லது அவருடைய சொந்த அரசாகவோதான் இருக்கும்.
உண்மையில், அவ்வாறு பாதுகாப்பு விலக்கப்படவில்லை. அவர் (ராஜீவ் காந்தி) பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைந்த அளவில் செய்யப்பட்டிருந்தன என்று ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
#WATCH | Mumbai, Maharashtra: On Lok Sabha LoP Rahul Gandhi's remarks, Union Minister Ramdas Athawale says, "Rahul Gandhi claims that his fatherâs security was withdrawn; however, his own party was in power at the Centre at the time... Rajiv Gandhi was the Prime Minister of the⦠pic.twitter.com/D9wokOGLIQ
— ANI (@ANI) November 25, 2026
Summary
Union Minister of State Ramdas Athawale has commented on Rahul Gandhi's remarks regarding the withdrawal of security for Rajiv Gandhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


