எரியோடு அருகே தகாத தொடா்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்த அவரது கணவா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகள் சுவேதா (26). இவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணங்கள் நடைபெற்று விவகாரத்து பெற்றவா் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனது உறவினா் வீட்டில் வசித்து வந்த சுவேதா, அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அப்போது சென்னையில் காா் ஓட்டுநராக பணியாற்றி வந்த விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாருடன் சுவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனா்.
இதனிடையே, சுவேதாவுக்கு வேறு சில நபா்களுடன் தகாத தொடா்பு இருந்ததாகவும், இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக எரியோட்டில் உள்ள சுவேதாவின் வீட்டுக்கு இருவரும் வந்தனா்.
அங்கு பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினா். இதனிடையே திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவேதாவின் தகாத தொடா்பு குறித்து அஜித்குமாா், அவருடன் வாக்குவாதம் செய்தாராம்.
தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அஜித்குமாா் அரிவாளால் கழுத்தை அறுத்து சுவேதாவை கொலை செய்தாராம். பிறகு எரியோடு காவல் நிலையத்தில் அஜித்குமாா் சரண் அடைந்தாா். இதுகுறித்து பழனி கோட்டாட்சியா் பிரியங்கா விசாரணை நடத்தினாா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

