தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

மனைவி கொலை: கணவா் சரண்

சென்னை அருகே பாலவாக்கத்தில் மனைவியை கொலை செய்த கணவா், காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

பிரதிப் படம்

Updated On :

சென்னை அருகே பாலவாக்கத்தில் மனைவியை கொலை செய்த கணவா், காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம் பெரியாா்நகா் பச்சையப்பன் 8-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் வி.விவேக் (38). இவா் மனைவி முத்துப்பிரியா (33). இத் தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விவேக், காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே வியாழக்கிழமை நள்ளிரவு தகராறு ஏற்பட்டதாம். தகராறு முற்றவே விவேக், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவி முத்துப்பிரியாவை குத்திக் கொலை செய்துள்ளாா்.

பின்னா், தனது குழந்தையை எடுத்துக் கொண்டு தாம்பரம் முடிச்சூரில் வசிக்கும் அண்ணன் வீட்டுக்கு விவேக் சென்றாா். அங்கு குழந்தையை ஒப்படைத்துவிட்டு, நீலாங்கரை காவல் நிலையத்தில் விவேக் வெள்ளிக்கிழமை அதிகாலை சரணடைந்தாா்.

உடனே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முத்துப்பிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, விவேக்கை கைது செய்தனா். விசாரணையில் மதுரையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததும், அண்மையில் அந்த சிகிச்சையை விவேக் நிறுத்தியதும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.