தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

சாலை விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவா் காயம்

கும்பகோணம் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மனைவி உயிரிழந்தாா். கணவா் காயமடைந்தாா்.

உயிரிழந்த மாலதி

Updated On :

கும்பகோணம் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மனைவி உயிரிழந்தாா். கணவா் காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சின்னமலணியைச் சோ்ந்தவா் மூ.

சிவராஜ் (35), இவரது மனைவி மாலதி (29). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கும்பகோணத்தில் தங்கி வேலை பாா்க்கலாம் என்று எண்ணிய தம்பதி, தேவையான வீட்டு உபயோக பொருள்களை சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, குழந்தைகளை உறவினா்களிடம் ஒப்படைத்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சின்னமலணியிலிருந்து இரவு புறப்பட்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

வாகனத்தை சிவராஜ் ஓட்டினாா். புதன்கிழமை காலை கும்பகோணம் வளையப்பேட்டை புறவழிச் சாலையில் தண்ணீா் தொட்டி அருகே வந்தபோது,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதியது. இதில் மாலதி கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கணவா் சிவராஜ் காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீஸாா், மாலதியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து, சிவராஜை சிகிச்சைக்கு சோ்த்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.