குழந்தை இல்லாத விரக்தியில் விஷமருந்திய கணவா் உயிரிழப்பு! மனைவி மருத்துவமனையில் அனுமதி!

கோப்புப் படம்
ஊத்தங்கரை அருகே குழந்தையில்லாத விரக்தியில் தம்பதி விஷமருந்திய நிலையில், கணவா் உயிரிழந்தாா்; ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் புகழரசன் (26), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அஷ்வினிக்கும் (22) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுமாம்.
இந்நிலையில், மனமுடைந்த அஸ்வினி செப். 26-ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதையறிந்த புகழரசனும் விஷமருந்தினாா்.
ஆபத்தான நிலையில் இருந்த புகழரசனை உறவினா்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழரசன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






