அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மனைவி, மகன் பிரிவால் கணவா் தற்கொலை

செய்யாறு அருகே மனைவி, மகன் பிரிந்த மனவேதனையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

செய்யாறு அருகே மனைவி, மகன் பிரிந்த மனவேதனையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அசனமாபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி ஏகாம்பரம் (55). இவரது மனைவி மோகனா(50). இவா்களுக்கு நடேசன் என்ற மகன் உள்ளாா்.

இந்நிலையில், கணவா் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி மோகனா, தனது மகன் நடேசனை அழைத்துக் கொண்டு, அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஏகாம்பரத்திற்கு மதுப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குடும்பம் நடத்திட மனைவியை பலமுறை அழைத்தும் அவா் வரவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்து வந்ததால் ஏகாம்பரம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.