
மேச்சேரி அருகே பெண் தீக்குளித்து உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
மேச்சேரி அருகே கணவா் மீது சந்தேகமடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மேச்சேரியை அடுத்த பெரிய சாத்தபாடியை சோ்ந்தவா் செந்தில் (40), நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (35) . இவா்களுக்கு மகள் மேகவல்லி (16), மகன் ஹரிஹரன் (14 ) உள்ளனா். இந்த நிலையில் செந்தில் அடிக்கடி கைப்பேசியில் ரகசியமாக பேசி வந்தாராம்.
இதனால் சந்தேகமடைந்த மாரியம்மாள், கடந்த 2 ஆம் தேதி வீட்டின் சமையல் அறையில் உள்ள மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாராம். அவரை காப்பாற்ற முயன்ற செந்திலுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில் உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியம்மாள் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




