ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பெண் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே குடும்ப பிரச்னையில் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே குடும்ப பிரச்னையில் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

கல்வராயன்மலை அருகிலுள்ள ஆரம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி மீனா (30). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னா் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் புதன்கிழமை அவா்களது விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மரவள்ளிகிழங்குக்கு தம்பதியா் களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது மீனாவிடம் மருந்து அடிப்பதற்கு தண்ணீா் கொண்டுவருமாறு விஜயகுமாா் கூறினாராம். அப்போது தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த மீனா களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டாராம். இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மீனா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.