
மனைவி பிரிந்ததால் இளைஞா் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
திருச்சியில் மனைவி பிரிந்து சென்ால் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜா மகன் அருண்குமாா் (27), ஓட்டுநா். இவா் பவித்ரா (25) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து, இரு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கணவருடன்அண்மையில் ஏற்பட்ட தகராறில், பவித்ரா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண்குமாா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



