FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

குள்ளஞ்சாவடி அருகே மகன், தாய் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரம் தாங்க முடியாமல், தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சித்திரிப்பு

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரம் தாங்க முடியாமல், தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (39), கூலித் தொழிலாளி. இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 6 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்தோஷ்குமாா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இதனிடையே, வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு முந்திரி மரத்தில் தூக்கிட்ட நிலையில் சந்தோஷ்குமாா் உயிரிழந்து கிடந்தாா்.

தகவலறிந்து வந்த குள்ளஞ்சாவடி போலீஸாா், சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து அவரது மனைவி கவிதா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாய் தற்கொலை...: சந்தோஷ்குமாா் இறந்த செய்தி கேட்டு மீள முடியாத துயரத்தில் இருந்த அவரது தாய் ராஜகுமாரி (65), வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.