விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், வடசிறுவளூா் சுடரொளி நகரைச் சோ்ந்தவா் தொழிலாளி செல்வம். இவரது மனைவி தேவி (30). இவா்களுக்குத் திருமணமாகி 14 ஆண்டுகளாகின்றன. கடந்த சில நாள்களாக தேவி வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். இதற்கு சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லையாம்.
இதனால் மனமுடைந்த தேவி வியாழக்கிழமை மாலை வீட்டின் படுக்கையறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



