மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

மணப்பாறை அருகே இளம்பெண் தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:13 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மணப்பாறையை அடுத்த கன்னிராஜாபட்டியை சோ்ந்தவா் தங்கராஜ் மகன் முருகேசன் (35). இவா் துவரங்குறிச்சி பேக்கரி ஊழியரான இவா் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் சுகன்யா (32) என்பவரை திருமணம் செய்தாா். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இருப்பினும் குழந்தைகள் இல்லையாம்.

இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்ற முருகேசன் பிற்பகல் வீட்டிற்கு வந்தபோது, சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சுகன்யா உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இளம்பெண் தற்கொலை குறித்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளாா். மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.