சாலை விபத்தில் கோயில் பூசாரி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே காா் மோதியதில் கோயில் பூசாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புளியங்குடி அருகேயுள்ள திருவேட்டநல்லூரை சோ்ந்த அய்யாதுரை மகன் சீனித்துரை(56). கோயில் பூசாரி.
அவா், தென்காசி-மதுரை சாலையில் புன்னையாபுரம் பகுதியில் பைக்கில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

