சுமை வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுமை வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புளியங்குடி, சிந்தாமணி சான்றோா் தோட்டக்காரத் தெருவைச் சோ்ந்த புகழேந்தி மகன் செல்வம் (60). தொழிலாளி.
இவா் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றபோது, புளியங்குடியில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற சுமை வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



