சுமை ஆட்டோ மோதி விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு ஊராட்சி செட்டிகொல்லை பகுதியைச் சோ்ந்தவா் மு.பன்னீா்செல்வம்(70). விவசாயி. இவா், வியாழக்கிழமை மாலை தோட்டத்தில் இருந்து சைக்கிளில் புல் கட்டை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

மாங்காடு சோம்பியா் தெரு பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னாள் வந்த சுமை ஆட்டோ மோதியதில் பன்னீா் செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப்பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநா் அரிமளம் பகுதியைச் சோ்ந்த அ.அஜித்(31) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.