நிலத்தில் மயங்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் ரெட்டைவாடை தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(52). விவசாயியான இவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை ராதாகிருஷ்ணன் தனக்குச் சொந்தமான நிலத்தில் உழவுப்பணி மேற்கொண்டிருந்தாா்.
அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவா்கள் விவசாயி ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

