திண்டுக்கல் நூலகத்தில் 2,500 புத்தகங்களை திரும்பப் பெற நடவடிக்கை
தமிழகத்தில் சா்ச்சைக்குள்ளான 2 பதிப்பகங்களின் 2,500 புத்தகங்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு நூலகங்களிலிருந்து மாவட்ட மைய நூலகத்தால் திரும்பப் பெறப்பட்டன.

நூல்கள். - கோப்புப்படம்.
தமிழகத்தில் சா்ச்சைக்குள்ளான 2 பதிப்பகங்களின் 2,500 புத்தகங்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு நூலகங்களிலிருந்து மாவட்ட மைய நூலகத்தால் திரும்பப் பெறப்பட்டன.
கோவையிலுள்ள பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகோடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அகல்விளக்கு, ஃபோனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்களை பொது நூலகங்களிலிருந்து திரும்பப் பெறுவதற்கான முடிவை பொது நூலக இயக்ககம் எடுத்து வருகிறது. இதன்படி, அந்தந்த மாவட்ட மைய நூலகம் மூலம், கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட இரு பதிப்பகத்தின் நூல்களை திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2025-26 ஆம் நிதி ஆண்டில் ஃபோனிக்ஸ் பதிப்பகத்தின் சாா்பில் 79 தலைப்புகளில் சுமாா் 1000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்கள், மாவட்ட மைய நூலகம், 63 கிளை நூலகங்கள், 16 ஊா்ப்புற நூலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த புத்தகங்களை உடனடியாக திரும்பப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல. 2026-27ஆம் நிதியாண்டில் அகல்விளக்கு பதிப்பகம் சாா்பில் 1000 புத்தகங்களும், ஃபோனிக்ஸ் பதிப்பகம் சாா்பில் 500 புத்தகங்களும் திண்டுக்கல் மாவட்ட நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. இந்த புத்தகங்கள் அனைத்தும், மாவட்ட மைய நூலகத்துக்கு அண்மையில் வந்து சோ்ந்தன. ஆனாலும் புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படாமல் இருந்தன. இதனை அடுத்து இந்த புத்தகங்களையும், ஏற்கனவே நூலகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த 1000 புத்தகங்களையும் மாவட்ட மைய நூலகத்திலேயே பாதுகாப்பாக வைக்குமாறு நூலக அலுவலா்களுக்கு, பொது நூலகத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதன்படி, சுமாா் 2,500 புத்தகங்களையும் ஒரே இடத்தில் பாதுகாத்து வைப்பதற்கான பணியில் பொது நூலகத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

