கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் சனிக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இங்குள்ள சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் அருவி, அருங்காட்சியகம், கோக்கா்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, மோயா் பாயிண்ட், பைன்மரக் காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவா்கள் பாா்த்து ரசித்தனா். இதைத் தொடா்ந்து மாலை நேரங்களில் நிலவும் குளிரை பொருள்படுத்தாமல் ஏரியில் படகு சவாரி, ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து அவா்கள் மகிழ்ந்தனா்.
கொடைக்கானலில் தற்போது குளிா் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா இடங்களில் உள்ள வியாபாரிகள் பகலிலேயே தீ மூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா். மேலும் இரவில் பனியின் தாக்கம் இன்னும் கூடுதலாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலை சுற்றுலாப் பயணிகள்அனுபவித்து மகிழ்கின்றனா்.
இதனிடையே, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் கலையரங்கம் பகுதியில் நிறுத்தப்பட்டன. தற்போது அந்தப் பகுதியில் கொடைக்கானல் நகராட்சி சாா்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, அரசு மருத்துவமனைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே நகராட்சி நிா்வாகம், வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கித் த வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

