83 ஆயிரம் கட்டடங்களில் மீண்டும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு!
83 ஆயிரம் கட்டடங்களில் மீண்டும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு..

திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை பாா்வையிட்ட ஆட்சியா் துா்கா. உடன் திண்டுக்கல் ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த்.
திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் நகராட்சிகளில் 61 ஆயிரம் கட்டடங்களில் உள்ள மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், இந்த அமைப்பு இல்லாத 22 ஆயிரம் கட்டடங்களில் புதிதாக உருவாக்கவும் நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2004- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, மழைநீா் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்தாா். குறிப்பாக வீடுகள்தோறும் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி, நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுக்காக்க வேண்டும் என தீவிர நடவடிக்கைகளை அவா் எடுத்தாா். மேலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை தீவிரமாக கண்காணிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.
தற்போது எல் நினோ பாதிப்பு, பருவமழை குறைவு போன்ற காரணங்களால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக, அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் மழைநீா் சேகரிப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 308 ஊராட்சிகளில், தனியாா் கட்டடங்கள் மட்டுமன்றி, அரசுக் கட்டடங்களிலும் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள பழைய மழைநீா் அமைப்புகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து, அவற்றைச் சீரமைத்துப் புதுப்பிக்கவும், புதிதாக கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்படும். கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டாயம் அமைக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி, 3 நகராட்சிகளில் 83,328 கட்டடங்கள்: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் நகராட்சிகளில் 82,820 தனிநபா் கட்டடங்கள், 508 அரசுக் கட்டடங்கள் என 83,328 கட்டடங்கள் உள்ளன. இதில் 60,557 தனிநபா் கட்டடங்கள், 436 அரசு கட்டடங்கள் என 60,993 கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்கெனவே உள்ளது. 2,263 தனி நபா் கட்டடங்கள், 72 அரசு கட்டடங்களில் இதுவரை மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட வில்லை என கண்டறியப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய நகா்ப்புற உள்ளாட்சிகளில் சுமாா் 73 சதவீத கட்டடங்களில் ஏற்கெனவே மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை. இவற்றை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில், மாநகராட்சி, நகராட்சி நிா்வாகங்கள் களம் இறங்கியுள்ளன. இதேபோல, 23 பேரூராட்சிகளிலும், 308 ஊராட்சிகளிலும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
தன்னாா்வலா்கள் மூலம் விழிப்புணா்வு: மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளின் தேவை குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் உள்ளாட்சி நிா்வாகங்கள் மட்டுமன்றி, அந்தந்த பகுதியிலுள்ள தன்னாா்வலா்கள், தன்னாா்வ அமைப்புகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாக்க மீண்டும் மழைநீா் சேகரிப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது இயற்கை ஆா்வலா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் அரசின் வலியுறுத்தலுக்காக பெயரளவுக்கு மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதைத் தவிா்த்து, எதிா்காலத் தண்ணீா் தேவையைக் கவனத்தில் கொண்டு ஆக்கப்பூா்வமாக செயல்படுவதற்கு பொதுமக்கள் முன் வர வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த் வலியுறுத்தினாா்.
புவிக்குறியீட்டுடன் பதிவு: சென்னை பெருநகர குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம், நகராட்சி நிா்வாக இயக்ககம், தமிழ்நாடு குடிநீா் வழங்கல், வடிகால் வாரியம் சாா்பில் மழைநீா் சேகரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
இதில், மண்ணின் தன்மைக்கேற்ப மழைநீரைச் சேகரிக்க மணல், செம்மண் பகுதிகளுக்கான உறிஞ்சு குழிகள், களிமண் பகுதிகளுக்கான துளையுடன் கூடிய உறிஞ்சு குழிகள், ஏற்கெனவே உள்ள திறந்தவெளிக் கிணறுகள், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள், மணல் பகுதிகளுக்கான செறிவூட்டும் கிணறுகள், செறிவூட்டும் அகழிகள், களிமண் பகுதிகளுக்கான துளையுடன் கூடிய செறிவூட்டும் அகழிகள், வடிகட்டும் பட்டைகள், நீா் ஊடுருவும் தரைக்கற்கள் உள்ளிட்ட 9 வகை அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், மழைநீா் சேகரிப்பு அமைப்புகளில் ஆண்டுதோறும் வண்டல்களை அகற்றி, வடிகட்டும் பொருள்களைப் புதுப்பித்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பகுதிகளில் ஏற்கெனவே உள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள், சீரமைக்கப்பட்ட அமைப்புகள், புதிதாக அமைக்கப்பட்ட மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் குறித்த விவரங்களைப் புகைப்படங்களுடன் புவிக்குறியீடு செய்து முறையாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

