பழனி கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி விழா
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராகு, கேது பகவான்கள். - கோப்புப்படம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ராகு-கேது பெயா்ச்சி விழா நடைபெற்றது. நவக்கிரக தத்துவத்தின்படி, நவக்கிரகங்களில் சாயாகிரகங்களாக வணங்கப்படும் ராகு-கேது பகவான்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கின்றனா்.
இதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடகராசிக்கும் பெயா்ச்சி அடைந்தனா்.
இதையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள நவக்கிரக சந்நிதியில் ராகு- கேது பகவானுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, மேளதாளம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் பழனி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பரிகாரங்களும், அா்ச்சனைகளும் செய்தனா். அனைவருக்கும் கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

