கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புமதுரை நகைக்கடை திருட்டு! ஸ்கூட்டியில் வந்த திருடன்.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

திருநாகேஸ்வரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி!

திருநாகேஸ்வரத்தில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை பற்றி..

Updated On :

திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகவல்லி நாகக்கன்னி உடனுறை இராகு பகவான் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சுக்ல சதுர்த்தியும் வெள்ளிக்கிழமையும் பூராடம் நக்ஷத்ரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை மணி 05.14க்கு மேஷ லக்னத்தில் ஸ்ரீ ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசமானார். அதேபோன்று, ஸ்ரீ கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசமானவார்.

இராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு இராகு பரிகார தலமான தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகவல்லி நாகக்கன்னி உடனுறை இராகு பகவானுக்கு மஞ்சள் சந்தனம் பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சரியாக 5.14 இராகு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதேபோன்று, ராகு-கேது பரிகாரத் தலமான ஸ்ரீ காளஹஸ்தி கோயிலிலும் ராகு-கேது பெயர்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.