ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

ராகு - கேது பெயர்ச்சி 2026! பொதுப் பலன்கள்!

2026 ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சிக்கான பொதுப்பலன்கள்..

ராகு - கேது பெயர்ச்சி

Updated On :

2026-ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சிக்கான பொதுப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருஷம் தக்ஷிணாயனம் சரத் ரிது ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2026 அன்றைய தினம் சுக்ல சதுர்த்தியும் வெள்ளிக்கிழமையும் பூராடம் நக்ஷத்ரமும் திருதி நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 27:36க்கு மாலை மணி 05.14க்கு மேஷ லக்னத்தில் ஸ்ரீ ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருஷம் டிசம்பர் 5-ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகு - கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால், மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

அறிவியல் பூர்வமாக நமது டிஎன்ஏ-தான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு - கேது என்னும் கிரகங்கள் டிஎன்ஏ போலத்தான். ராகுவை வைத்து தகப்பனார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்துகொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர். ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றைச் சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

பொதுப் பலன்கள்

உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். குரு - கேது நக்ஷத்ரத்தில் மாற்றம் பெறுகிறார். ஆயில்ய நக்ஷத்ரத்தில் கேதுவும் - அவிட்டம் நக்ஷத்ரத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது செவ்வாயினுடைய நக்ஷத்ரம் - சனியினுடைய ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கேது - சந்திரன் ராசியில் புதன் அம்சத்தில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்குப் பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதைச் சரி செய்வதுமாக இருக்கும்.

ராகுவினுடைய மாற்றம் சனி வீட்டில் இருக்கிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் பார்வையால் ராகு பலம் பெறுகிறார். ஆன்மிகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தமான பிரச்னைகள் அதிகமாவதும் அதைத் தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும்.

அறுவைச் சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும். அதே வேளையில் கேதுவிற்கு கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மிகம் - கோயில் சம்பந்தமான பிரச்னைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும்.

ராகு - கேது பொது பரிகாரம்

ராகுவும் - கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது. ராகுவிற்கு ஸ்ரீ துர்க்கை அம்சமுள்ள அம்மனையும், கேதுவிற்கு விநாயகர் - பைரவர் - ஆஞ்சனேயரையும் வணங்குவது நன்மை தரும்.

Rahu-Ketu Transit 2026! General Predictions!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.