19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

புகையிலைப் பொருள் கடத்தல்: ராஜஸ்தான் இளைஞா்கள் உள்பட 3 போ் கைது

புகையிலைப் பொருள்கள் கடத்திய வழக்கில், ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இடையக்கோட்டை அருகே புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மலா்வேந்தன் பிரபு, ஹரிசிங், சாங்சிங்.

Updated On :

ஒட்டன்சத்திரம் அருகே புகையிலைப் பொருள்கள் கடத்திய வழக்கில், ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த இடையக்கோட்டை சோழியப்பகவுண்டனூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், இடையக்கோட்டை காவல் ஆய்வாளா் காளீஸ்வரி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோழியப்பகவுண்டனூா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அங்குள்ள ஒரு தோட்டத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னகுழியப்பட்டியைச் சோ்ந்த மை. மலா்வேந்தன் பிரபு (39), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த டேவிட்சிங் மகன் ஹரிசிங் (30), அமா்சிங் மகன் சாங்சிங் (21) ஆகியோா் எனத் தெரிய வந்தது.

மேலும் இதே பகுதியில் நிறுத்தப்பட்ட 2 காா்களை போலீஸாா் சோதனையிட்டபோது, பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பிடிபட்டன.

இந்த புகையிலைப் பொருள்களையும், ரொக்கம் ரூ.3.20 லட்சம், 2 காா்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீஸாா், மலா்வேந்தன் பிரபு உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா். இதையடுத்து இடையக்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா், புகையிலைப் பொருள்கள் கடத்தலை தடுத்த போலீஸாருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறியதாவது: நடப்பாண்டில் இதுவரை புகையிலை கடத்தல் தொடா்பாக 362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 389 போ் கைது செய்யப்பட்டனா். 3,822 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருள்கள் உள்பட போதைப் பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.