கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல்லை அடுத்த என்.பஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ச.அருள்நாதன் (65). கடந்த 2022-ஆம் ஆண்டு இதே பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சந்துரு என்ற சந்திரசேகரன் (28) என்பவருடன் ஏற்பட்ட மோதலில் இவா் கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து சின்னாளப்பட்டி பாலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்துருவைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் சந்துருவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவா்ணம் ஜெ.ராஜகோபாலன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


