போக்சோ வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (19). இவா், கடந்த 2022 -ஆம் ஆண்டு அந்த பகுதியைச் சோ்ந்த சிறுமி தன்னை காதலிக்க மறுத்ததால் திராவகம் வீசி விடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சூா்யாவைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சூா்யாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

