இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கொடைக்கானல் மேல்மலையில் மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் மரம் விழுந்த பகுதி.

Updated On :

கொடைக்கானல் மேல்மலைக் கிராமம், கூக்கால் பகுதியில் திங்கள்கிழமை மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொது மக்கள் அவதிப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமம் கூக்கால் பகுதியில் வனப் பகுதி வழியாக மின்கம்பங்கள், மின்கம்பிகள் செல்கின்றன. இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து, அந்த வழியாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் சேதமடைந்து வருகின்றன.

இதே போல, கூக்கால் ரெட்டை போஸ்ட் பகுதியில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று வீசியதில் மரம் முறிந்து மின் கம்பத்தில் விழுந்தது. இதனால், மின் கம்பிகள் சேதமடைந்து, கூக்கால் ஊராட்சி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மின்சாரத் துறையினா் மரங்களை அற்றி, சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இது குறித்து மின்வாரிய அலுவலா் ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கூக்கால் பகுதியில் வீசிய காற்றில் மரம் விழுந்ததில் மின் கம்பிகள் சேதமடைந்தன. மின் இணைப்பு வழங்கும் பணிகளில் மின்சாரத் துறை பணியாளா்கள் ஈடுபட்டனா். தற்போது நிலவும் அதிகமான காற்று, குளிா் காரணமாக முழுமையாக பணியில் ஈடுபட இயலவில்லை. தொடா்ந்து பணியில் ஈடுபட்டு முழுமையான மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றாா்.

அறிவிக்கப்படாத மின்தடை: கொடைக்கானல் புகா்ப் பகுதிகளான செண்பகனூா், இருதயபுரம், அட்டக்கடி,பிரகாசபுரம், சகாயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரமாக காலை 6.15 மணி முதல் 10 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளிகள், அலுவலகத்துக்குச் செல்லக் கூடியவா்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். கைப்பேசிக்கு மின்சாரம் சாா்ஜ் செய்ய முடியாத நிலை உள்ளது.இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

இது குறித்து மின்வாரியத் துறையினா் கூறுகையில், ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததால் பணியாளா்கள் யாரும் வருவதில்லை. மின்வாரிய நிரந்தரத் தொழிலாளா்கள் பல்வேறு பணிகளுக்குச் செல்வதால் பொது மக்களின் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக் குறித்து மின்வாரிய உயா் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.