மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

தலைமைச் செயலகத்தில் மின் தடையா? நிர்மல் குமார் சொல்லும் விளக்கம்

தலைமைச் செயலகத்தில் மின் தடையா என்பது குறித்து நிர்மல் குமார் சொல்லும் விளக்கம்

Tamil Nadu Electricity and Law Minister R Nirmal Kumar

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் - ENS

Published On :

சென்னையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் மின் தடை ஏற்பட்டதாக நேற்று ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியான நிலையில், அது மின்தடையல்ல என்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக அரசு சார்பில், தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில் அது குறித்து மின்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.

தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தலைமைச் செயலகத்தில் மின் தடை ஏற்பட்டது குறித்து கேட்கப்பட்டதற்கு, தலைமைச் செயலகத்தில் மின் தடை ஏற்படவில்லை. ஒரு தளத்தில் உள்ள ஸ்விட்ச் போர்டு எரிந்ததால், அங்கு மட்டும் சீரமைப்புப் பணிகள் நடந்து பிறகு, சரி செய்யப்பட்டது. அது மின் தடையல்ல, மற்ற தளங்களில் மின்சார சேவை இருந்தது.

தலைமைச் செயலகம், ஸ்டான்லி மருத்துவமனை போன்றவற்றுக்கு இரண்டு ஃபீடர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும். எனவே, மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் பீக் ஹவர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இருந்த காசி என்பவர் தேடப்பட்ட வருகிறார். அவர் கைது செய்யப்பட்டதும் பல விவகாரங்கள் தெரிய வரும் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில், தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது குறித்து பேசிய அமைச்சர், திமுக ஆட்சிக் காலத்தில் சரியாக பணிகளை கையாளாததால்தான் இந்த நிலை ஏற்பட்டது, வெய்யில் அதிகரித்திருப்பதால், தேசிய அளவில் கூட, முன்கூட்டியே மின் தேவை அதிகரிக்கும் என்பதை கணிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு, மத்திய தொகுப்பிலிருந்து போதிய மின்சாரம் கிடைக்காததால் தனியாரிடமிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மின் தேவை கூடுதலாக 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதால் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளோம். 3500 யூனிட்டுக்கு டெண்டர் விட்டாலும் 1500 யூனிட் மட்டுமே வாங்கவிருக்கிறோம். இது குறுகிய கால டெண்டர்தான். திமுக ஆட்சியில் நீண்ட கால செயல்திட்டங்கள் எதையும் செயல்படுத்தாததால் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக விலைக்கு வாங்கப்படும் மின்சாரம் மாலை 6 மணி முதல் 12 மணி வரை மிக முக்கிய தேவை நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.