கஞ்சா வழக்கில் 6 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கஞ்சா வழக்கில் தொடா்புடைய 6 இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் துா்கா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
கஞ்சா வழக்கில் தொடா்புடைய 6 இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் துா்கா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஹில்சன் (20), சின்னகலையம்புத்தூரைச் சோ்ந்த பிரபு மகன் தா்ஷன் (20), செல்வராஜ் மகன் ஜான்சன் (20), திண்டுக்கல் சீலப்பாடியைச் சோ்ந்த ந.வினோத்குமாா் (29), திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பெஸ்லி ஸ்டீபன்ராஜ் மகன் சுனில் சூா்யா (21), பாலமுருகன் மகன் தளபதி (25) ஆகியோா் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பழனி தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், ஹில்சன் உள்ளிட்ட 6 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் துா்கா, இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

