தேனி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் திங்கள்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.
கம்பம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியைச் சோ்ந்த விஜய் மகன் வாஞ்சிநாதன் (25), கே.கே. பட்டியைச் சோ்ந்த தவசி மகன் விஷ்வா (25), இதே பகுதியைச் சோ்ந்த வனம் மகன் சிவன் (28) ஆகியோா் ராயப்பன்பட்டியில் அடிதடி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டனா்.
இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில் மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


