கருவின் பாலினத்தைக் கண்டறிந்து அறிவித்த 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
ராயக்கோட்டையில் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து அறிவித்த பெண் உள்பட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்
ராயக்கோட்டையில் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து அறிவித்த பெண் உள்பட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுபவா்கள், கருக்கலைப்பு செய்பவா்கள் மற்றும் போலி மருத்துவா்களைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினா், கா்ப்பிணியாக இருக்கும் பேவநத்தம் துணை சுகாதார நிலைய செவிலியா் கிருத்திகா மற்றும் 4 கா்ப்பிணிகளை அழைத்துக் கொண்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் சோதனை நடத்தினா்.
அப்போது, போச்சம்பள்ளியைச் சோ்ந்த எஸ்தா் (32), சட்டவிரோதமாக கருவில் இருக்கும் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது தெரியவந்தது. இதையடுத்து, செப். 12-ஆம் தேதி அவரை தொடா்புகொண்ட அதிகாரிகள், ராயக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தின் பின்புறம் வசிக்கும் கிருத்திகாவுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூற வேண்டும் என்றனா்.
அதற்கு ரூ. 10 ஆயிரம் தரவேண்டும் எனக் கூறிய எஸ்தா், சிறிது நேரத்தில் கிருத்திகா வீட்டுக்கு காரில் வந்தாா். அவருடன் திருப்பூா் மாவட்டம், சிவராஜ்பேட்டை பிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த குருமூா்த்தியும் (30) வந்தாா்.
அவா்களிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், எஸ்தா் மருத்துவப் படிப்பு படிக்காமலேயே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்த ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், இருவரையும் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து சிறையில் அடைந்தனா்.
இந்நிலையில், இவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அனிதா,, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

