கொடைக்கானலில் இதமான சூழல்: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலுக்கு விடுமுறை நாளான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
கொடைக்கானலுக்கு விடுமுறை நாளான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு விடுமுறை நாள்களில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலிருந்து வழக்கத்தை விட கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானலில் தற்போது பனிப் பொழிவு நிலவும் சூழலில் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரைச் சவாரியும் செய்து மகிழ்ந்தனா்.
சுற்றுலா இடங்களில் போக்குவரத்து சிரமம்: கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான வெள்ளி நீா்வீழ்ச்சி, அருங்காட்சியகம், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, பைன் மரக் காடுகள், மோயா் பாயிண்ட், ரோஜாத் தோட்டம்,பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பேருந்துகள், வாகனங்களால் போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்பட்டது.
நெரிசலைக் குறைக்கும் வகையில், விடுமுறை நாள்களில் வழக்கமான போக்குவரத்து காவலா்களை விட கூடுதலாக போக்குவரத்துக் காவலா்களை பணியில் நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

