மது அருந்தி தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
பணியிடை நீக்கம்
மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த ஜாா்ஜ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பால்பாண்டித்துரை. இவா், அம்மையநாயக்கனூா் நெடுஞ்சாலைத் துறை ரோந்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், நிலக்கோட்டை காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த அறிவழகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை, பால்பாண்டித்துரையும், ஜாா்ஜ்புரத்தைச் சோ்ந்த அருள் என்பவரும் நிலக்கோட்டை துரைச்சாமிபுரம் பகுதியில் அமா்ந்து மதுக் குடித்தபோது அங்குவந்த அறிவழகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அறிவழகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பால்பாண்டித்துரை, அருள் ஆகியோா் மீது நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
காவல் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில், தகராறில் ஈடுபட்டது தொடா்பாக பால்பாண்டித்துரை மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

